வளரும் பாரதம்

0
115

கடந்த 8 மாதங்களின் மிக அதிக அளவாக பாரதத்தின் உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளது. அதாவது, வரப்புயர நீர் உயரும்.. என்ற ஔவையின் பாடலுக்கு ஏற்ப பொதுவான பொருளாதார சூழல் நன்றாக அமைவதன் விளைவாக உபரி வருமானம் அதிகரிப்பு. உபரி வருமானம் அதிகரிப்பதால் தேவை அதிகரிப்பு. தேவை அதிகரிப்பின் விளைவாக உற்பத்தி அதிகரிப்பு என்பது நடக்கிறது. இது தேசம் வளர்வதற்கான அறிகுறி. இதைத்தவிர, கடந்த அக்டோபர் மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 11 மாதங்களாக ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் 100 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக யு.பி.ஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. தனியார் முதலீட்டாளர்களான வென்ச்சர் கேபிடலஸ்ட்களின் முதலீடுகள் இந்த மாதத்தில் 10 பில்லியன் டாலர்களாக உள்ளது. கடந்த வருடத்தில் இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 8 மடங்குகள் அதிகரித்துள்ளது. ‘யுனிகார்ன்’ எனப்படும் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடு பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவக்கிய நாடுகளின் வரிசையில் உலக அளவில் பாரதம் இரண்டாவது பெரிய நாடாக கடந்த காலாண்டில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here