கம்யூனிஸ்ட் நாடான சீனாவை கண்டித்து இங்கிலாந்தின் சீன தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு 1989ல் நடைபெற்ற தியனன்மென் இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கு காரணமான சீன பயங்கரவாதத்தை எதிர்த்து நேற்று (04.06.2021) ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1989ல் தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் என்பது 1989ல் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை குறிக்கும். சீனாவில் தொழிலாளர்களும், கல்லூரி மாணவர்களும், கற்றவர்களும் இப்போராட்டத்தை தலைமை தாங்கியுள்ளனர். 1989இல் ஏப்ரல் 15 முதல் ஜூன் 4 வரை இப்போராட்டங்கள் நடந்தன.
1989ல் ஜூன் 5ஆம் திகதி தியனன்மென் சதுக்கத்தில் “கவச தாங்கிக் காரன்” என்று அழைக்கப்பட்ட கல்லூரி மாணவர் சீனாவின் கவச தாங்கிகளை நிறுத்த முயல்கிறார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக போராளிகள் போராட்டம் செய்துள்ளனர். பெய்ஜிங்கில் டியனன்மென் சதுக்கத்தில் முக்கியமான போராட்டங்கள் நடந்தன, ஆனாலும் சாங்காய் போன்ற பல்வேறு சீன நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. பெய்ஜிங்கில் இந்த அறவழிப் போராளிகள் மீது சீன இராணுவம் தாக்குதல் செய்து பலரும் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
உயிரிழந்த மக்கள் கணக்கெடுப்பு, சீன அரசு ஆவணங்களின் படி 200-300, நியூயார்க் டைம்ஸ் இதழின் படி 300-800, சீன மாணவர்களின் சங்கங்களின் படி 2,000-3,000 ஆகும். இந்த வன்முறையுக்கு பிறகு சீன அரசு பல மக்களை கைது செய்து வெளிநாடு செய்தி ஊடகங்களை தடை செய்துள்ளது. சீன அரசு செய்த வன்முறையையும் ஊடகம் மீது தடை செயலையும் பல்வேறு நாடுகள் கண்டனம் செய்தன. சீனாவிற்கான பிரித்தானிய தூதுவர் சர் ஆலன் டொனால்டு 2017-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆவணங்களின்படி, இப்போராட்டத்தில் 10,000 பேர் பலியானதாக தெரிவிக்கிறார்.