ஹிந்துகளை கொன்று குவித்த திப்பு சுல்தான் சிலை அமைக்க பாஜவினர் எதிர்ப்பு.
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரொடுதுரு நகரில் அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உள்ளூர் முஸ்லிம்களும் இணைந்து திப்பு சுல்தானின் சிலையை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை, அங்குள்ள பா.ஜ.கவினரும் ஹிந்துக்களும் எதிர்க்கின்றனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர் சோமு வீரராஜு, ‘ஏராளமான ஹிந்துக்களைக் கொன்ற திப்புவின் சிலையை அமைப்பது அங்குள்ள ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல். இது அப்பகுதியில் நிலவும் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமைவிட திப்பு சுல்தான் பெரியவர் அல்ல. எனவே, திப்பு சுல்தானின் சிலைக்கு பதிலாக, அப்துல் கலாமின் சிலை அமைக்கப்பட வேண்டும்’ என என கோரியுள்ளார்.