பட்டியலினத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வரும் சேலத்தில், பட்டியலினத்தவர் அல்லாத ஒருவரை பிஷப்பாக நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்து புதிய பேராயராக பொறுப்பேற்ற லியோபோல்டோ கிரெல்லிக்கு, பட்டியலின கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளனர்.
‘சேலத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவரை பிஷப்பாக நியமிக்க வேண்டும். பாண்டிச்சேரி, கடலூர், குழித்துறை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மறைமாவட்டங்களில் பட்டியலின பேராயர்களை நியமிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் பட்டியலின கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பட்டியலின பிஷப்பையே நியமிக்க வேண்டும்’ என தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவர் மேரி ஜான் தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது போன்று ஜாதிய பாகுபாடுகள் தொடர்ந்தால் தீண்டாமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் எச்சரித்துள்ளார்.
இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பட்டியல் சமூகம் என்பதால் தான் மதம் மாறுகிறோம் என்று மதம் மாறியும் சாதியை பின்பற்றி வாழ்கின்றனர் சில கிறித்துவ கூட்டமைப்பு.