வலதுசாரி ஆதரவாளர்கள், தேச நலன் விரும்பிகள் உள்ளிட்டோரின் புளு டிக்கை நீக்குதல், கணக்குகளை முடக்குதல் என செயல்பட்டு வரும் டுவிட்டர், பாரத நாட்டிற்கு எதிராக பயங்கரவாத செயல்பாட்டுக்கு துணை போகும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற அமைப்பின் கர்நாடக கிளைக்கு ‘புளூ டிக்’ வழங்கியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, கறுப்புப் பண பரிவர்த்தனைகள், வெளிநாட்டுப் பண மோசடி, லவ் ஜிஹாத், பயங்கரவாத பயிற்சி என பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது பி.எப்.ஐ அமைப்பு. சமீபத்தில் கூட, 200கும் அதிகமான தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு கேரள வனப்பகுதிகளில் ஆயுதப் பயிற்சி அளித்தது. இந்த சமயத்தில் இது போன்ற செயல்கள் மூலம் ட்விட்டர் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.