சிங்கத்தை சிம்மாசனத்தில் இருந்து இறக்க நரி கூட்டத்தின் சிங்க வேஷம்.

1
319

காங்கிரஸ் தன் கடைசி மூச்சை விட தயாராகிறது. சிங்கத்தை வீழ்த்த சிறு நரிகள் கூட்டம் டில்லியில் சரத்பவார் தலைமையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை.

வர போகும் 2024 பார்லி. லோக்சபா தேர்தலில், மோடி அரசை ஆட்சியில் இருந்து நீக்க, மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் சரத்பவார் இறங்கியுள்ளார். இதற்காக தேர்தல் பிரசார வியூக மன்னன் என்ற பிம்பத்தை உருவாக்கி உள்ள பிரசாந்த் கிஷோரின் உதவியுடன், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையாக பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு சரத்பவார் அழைப்பு விடுத்தார்….

சரத் பவார், அழைப்பு விடுத்ததையடுத்து இன்று டில்லியில் சரத் பவார் இல்லத்தில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி, தேசிய மாநாட்டு கட்சியின், ஒமர் அப்துல்லா, பா.ஜ.க விலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மியின், சஞ்சன் சிங், இந்திய கம்யூ,.டி. ராஜா, பா.ஜ.விலிருந்து விலகிய சுதீந்திர குல்கர்னி, சமாஜ்வாதி கட்சியின் கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டம் 2024 பார்லி. லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணிக்கு அடித்தளம் அமைக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆக சிங்கத்தை வீழ்த்த சிறு நரிகள் கூட்டம் மூன்றாவது அணியாம்

* கம்யூனிஸ்ட்கள் இருக்கும் இடத்தில் மம்தா இருக்க மாட்டார்

* சமாஜ்வாடி இருக்கும் இடத்தில் மாயாவதி இருக்க மாட்டார்

* சந்திரபாபு நாயுடு இருக்கும் இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டி இருக்க மாட்டார்.
அத்தனை மாநிலங்களிலும் யார் கூட வேணும்னாலும் சேருகிறேன் என்று கெஞ்சும் காங்கிரஸை, யாரும் சேர்க்காத பட்சத்தில் தனியாக நின்று தன் கடைசி மூச்சை விட தயாராகிறது காங்கிரஸ்.

ஒரு நல்லவர எதிர்க்க எத்தன கயவர்கள் கூட்டம் போடறானுங்க பாருங்க. எத்தனை ஓநாய்கள் கூடினாலும் சிங்கத்தை வீழ்த்த முடியாது.

1 COMMENT

  1. Right now it seems like Drupal is the preferred blogging platform available right now.
    (from what I’ve read) Is that what you’re using on your blog?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here