முஸ்லீம் பயங்கரவாத நாடான பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து ‘கிரே’ பட்டியலில் நீடிப்பதாக, எப்.ஏ.டி.எப்., அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸ் தலைநகர் பாரிசில், எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு செயல்பட்டு வருகிறது. ஜி – 7′ நாடுகள் இணைந்து உருவாக்கிய இந்தக் குழு, உலகளவில் நடக்கும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இக்குழுவின் ‘கிரே’ பட்டியலில் 2018ல் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வதை தடுக்காதது போன்ற காரணங்களால் இந்த பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றது. இதனால் சர்வதேச நிதியுதவியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் எப்.ஏ.டி.எப்., தலைவர் மார்கஸ் பிளைர் கூறியதாவது: பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்குவதை தடுக்க, பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.எனினும் 27 திட்டங்களில் மூன்று திட்டங்களை இன்னும் முழுமையாக செய்து முடிக்காமல் உள்ளதால், பாகிஸ்தான் ‘கிரே’ பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது .இவ்வாறு அவர் கூறினார். இது, பாகிஸ்தானிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.