காஷ்மீரீல் உள்ள விமான படை தளத்தில் வெடிகுண்டு வீச்சி; இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைவரிசையா என விசாரணை.

1
163

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமானப்படை தளம் மீது டிரோன்கள் மூலமாக பயங்கரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.


காஷ்மீரில் ஜம்முவில் விமான நிலைய வளாகத்துக்குள் இந்திய விமானப்படை தளம் உள்ளது.அங்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படும் 2 டிரோன்கள், ஜம்மு விமானப்படை தளத்தை நோக்கி வந்தன. விமான தளத்துக்கு மேலே வந்தவுடன், டிரோன்களில் இருந்த 2 குண்டுகள், விமான தளத்தின் மீது போடப்பட்டன.

ஒரு குண்டு, தொழில்நுட்ப பகுதியில் உள்ள ஒற்றை மாடி கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டிடத்தின் கூரை சேதமடைந்தது. மற்றொரு குண்டு, திறந்தவெளி பகுதியில் விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானப்படை வீரர்கள் அரவிந்த் சிங், எஸ்.கே.சிங் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். நல்லவேளையாக உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ இல்லை.

தகவல் அறிந்தவுடன், டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் விமானப்படை தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு விசாரணையை மேற்பார்வையிட்டனர்.

டிரோன்கள் எந்த பாதை வழியாக வந்தன என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜம்மு விமானப்படை தளம், சர்வதேச எல்லையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. எனவே, இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தான் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

1 COMMENT

  1. Hi there, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of spam remarks?
    If so how do you stop it, any plugin or anything you can recommend?
    I get so much lately it’s driving me crazy so any support is very much
    appreciated.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here