விவசாயிகள் மீதுள்ள அக்கறையை பிரதிபலிக்கும் மடேரா தீர்மானம் – அமைச்சர் ஜெய்சங்கர்.

0
143
விவசாயிகள் மீதுள்ள அக்கறையை பிரதிபலிக்கும் மடேரா தீர்மானம் – அமைச்சர் ஜெய்சங்கர்.

“சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன் மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில், ஜி – 20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, ‘மடேரா’ தீர்மானம் அமைந்துள்ளது,” என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


ஐரோப்பிய நாடான இத்தாலியின் மடேரா பகுதியில், ஜி – 20 உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு, நேற்று முன்தினம் (29.06.2021) நடைபெற்றது. அதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அந்த மாநாட்டில், மடேரா தீர்மானத்திற்கு, அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்தன. இந்த தீர்மானத்தின்படி, கொரோனா வைரசால், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய, ஒன்றிணைந்து முயற்சிகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2030ம் ஆண்டுக்குள், உலகில் பசி பட்டினியால் ஏற்படும் பஞ்சத்தை ஒழிக்க, அனைத்து அமைச்சர்களும் உறுதி ஏற்றனர்.

இந்நிலையில், அந்த மாநாடு குறித்து, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தன், சுட்டுரை பதிவில், ‘இத்தாலியில் நடந்த ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில், உணவு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதற்கு என் பாராட்டுகள்.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன், உள்ளூர் உணவு கலாசாரங்களை ஊக்குவிக்க முடிவெடுக்கப்பட்டது. அதோடு, வேளாண் பன்முகத்தன்மையை அங்கீகரித்தல் உள்ளிட்டவற்றின்மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில், மடேரா தீர்மானம் அமைந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here