பசு கடத்தல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – அசாம் முதல்வர் காவல்துறையிடம் வேண்டுகோள்.

0
271

அசாமில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளிடம் உரையாற்றிய அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பசு கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


அசாமில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றிய அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பசுமாடு நமக்கு புனிதமான விலங்கு. அதை நாம் அனைத்து வகையிலும் பாதுகாக்க வேண்டும். அசாமில் பசுக் கடத்தல் பல ஆண்டுகளாக நடந்து வரும் 1,000 கோடி ரூபாய் சட்டவிரோத வர்த்தகம். இதில், பல சர்வதேச சக்திகள் ஈடுபட்டுள்ளனர். அசாமில் இருந்து ஏராளமான கால்நடைகள் சட்டவிரோதமாக பங்களாதேஷுக்கு கடத்தப்படுகின்றன. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். இதுவரை நூற்றுக்கணக்கான கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள். இதில் ஈடுபட்ட ஒரு காவல்துறை டி.எஸ்.பியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here