தடுப்பூசி ஏற்றுமதி

0
621

உலக நாடுகளையும் அதன் மக்களையும் ஒரே குடும்பமாக பார்க்கும் ‘வசுதைவ குடும்பகம்’ எனும் ஹிந்து தர்மத்திற்கேற்ப ‘மைத்ரி’ திட்டத்தின் கீழ் பாரதம் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கும் ஐ,நா அமைதி படைக்கும் இலவசமாக அளித்தது. 26 நாடுகளுக்கு 3 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்ததால் தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில் 7 மாதங்கள் கழித்து மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது பாரதம். முதற்கட்டமாக மியான்மர், வங்கதேசம், நேபாளம், ஈரான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதல்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here