தன்னிகரற்ற சேவையை அளித்து ‘உங்களால் ஈா்க்கப்பட்டு பெரிதும் பிரபலம் அடையாத திறமைமிகுந்த அபூா்வ நபா்களை பத்மா விருதுகளுக்கு சிபாரிசு செய்யுங்கள்‘ என பிரதமா் நரேந்திர மோடி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு முன்பு காங்கிரஸ் தனக்கு தேவையான நபர்களுக்கு பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்து பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டது. அனால் தற்போது தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமா் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளிக்கும் ஏராளமான திறமைவாய்ந்த துடிப்பானவர்கள் இந்தியாவில் உள்ளனர்.
அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதோ அல்லது கண்டிருக்கவோ இல்லை. இதுபோன்று ‘உங்களால் ஈா்க்கப்பட்டு பெரிதும் பிரபலம் அடையாத திறமைவாய்ந்த அபூா்வ நபா்களை பத்மா விருதுகளுக்கு சிபாரிசு செய்யுங்கள்.‘ பத்மா விருதுகளுக்கான சிபாரிசு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை https://padmaawards.gov.in பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.