ஊராட்சி அலுவலக முகப்பில் உதயசூரியன் படம் வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அப்பகுதியில் உள்ள நபர்கள் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெரும்பாண்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாஸ்கர். அவர் கும்பகோணம் வடக்கு தி.மு.க., ஒன்றிய செயலராகவும் உள்ளார். தற்போது, பஞ்சாயத்து அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பஞ்சாயத்து அலுவலகத்தின் முகப்பில், புதிதாக அமைக்கப்பட்ட, ‘போர்டிகோ’ கூரையில், தி.மு.க.,வின் சின்னமான உதயசூரியன் வரையப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு சொந்தமான அலுவலகமா அல்லது தி.மு.க., அலுவலகமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுகவின் அராஜக போக்கு ஒவ்வொன்றாக வெளி வருகிறது.