சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி கோரி இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.

0
229

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி, கோவிலுக்குள் விழா நடத்தப்பட்டு வருகிறது. நாளை 14ம் தேதி தேர்த் திருவிழா, 15ம் தேதி தரிசன விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., பாண்டியன், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கோவில் செயலர் ராஜகணேச தீட்சிதர், நவமணி தீட்சிதர், தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ‘தேரோட்டத்தை பக்தர்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும்’ என, முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாண்டியன், கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் மொபைல் போனில் பேசினார். குரோனா பரவல் காரணமாக அனுமதி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி, பா.ஜ., நிர்வாகிகள், ஹிந்து முன்னணியினர், ஆலய பாதுகாப்புக் குழுவினர் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ உட்பட பலர் கீழ வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here