இன்ஜினியரிங் படிப்பின் தரம் குறைந்து விட்டதாலும் பள்ளிகளில் மனப்பாட கல்வி அதிகரித்துள்ளதாலும் நுழைவு தேர்வை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் 2005ல் 220 இன்ஜி. கல்லுாரிகள் இருந்தன. தற்போது 520க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இன்ஜினியரிங் படிப்பை முடிக்கின்றனர்.
ஆனால் இன்ஜினியரிங் பட்டம் பெறுவோரில் 80 சதவீதம் பேர் படைப்பாக்க சிந்தனை கள அறிவு வேலைவாய்ப்பு திறன் வளர்த்தல் போன்றவற்றில் பின்தங்கியுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு போன்றவற்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் மனப்பாட கல்வி அதிகரித்துள்ளதால் நுழைவு தேர்வு அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார் பாலகுருசாமி.