நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அரசு சார்பில் ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், சாலையில் அமைக்கப்பட்டுள்ள தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் அலங்கரிக்கப்படாமல் கேட்பாரற்று கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்கள், என 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னையில் மட்டும் உள்ளது. தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன. அவை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, துறைமுகம், அரசு அலுவலக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.
அந்த சிலைகளை அந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டும், அழகுபடுத்தப்பட்டு, சிலைகள் அலங்கரிக்கப்படுகின்றன.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அந்த சிலைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகம் செய்யாமல் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. அவர்களால் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை, நாம் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் கேட்பாரற்று கிடக்கின்றன.