முஸ்லிம் தெருக்களில் ஹிந்துக்கள் நுழையத் தடை

0
769

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய தெருக்களில் ஹிந்துக்கள் நுழையக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு ஹிந்து இளைஞரின் இருசக்கர வாகனத்தின் சாவியை இந்திய தேசிய லீக் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் பிடுங்கி வைத்துக் கொண்டு, தெருவை இந்துக்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். இத்தகவலை அறிந்த வேடசந்தூர் இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று இதனை விசாரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய தேசிய லீக் முஸ்லிம் அமைப்பை சேர்ந்த வன்முறையாளர்கள், இந்து முன்னணி அமைப்பினர் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வேடசந்தூர் இந்து முன்னணி அமைப்பினர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து வேடச்சந்தூர் காவல் துறையினர் பழனியில் இருந்த முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 9 பேரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here