உணவு பாதுகாப்பு துறை அலட்சியம்: ஹோட்டல்களால் நோயாளியாகும் அரசு

0
435

சென்னையில் மக்கள் பெருக்கம், ஹோட்டல்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, உணவு பாதுகாப்பு துறையை அரசு மேம்படுத்தாமல் உள்ளது. உணவு பாதுகாப்பு பணியாளர்கள் பெயரளவுக்கே உள்ள நிலையில், வேகமாகவும், பரவலாகவும், உறுதியாகவும் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு, அதிகாரமற்ற, பலவீனமான அமைப்பாக மாறியுள்ளது.
தரமற்ற, நோய் ஏற்படுத்தக்கூடிய உணவு விற்பனையை தடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது போன்ற உணவுக்கூடங்களால் நோயாளிகள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெருந்தொகையை சுகாதாரத்துறை சுமக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாக, மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here