உயிரே போனாலும் போகட்டும் காபுலில் உள்ள ஹிந்து பூஜாரி வீர விரதம்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் நாட்டை காத்திட வேண்டிய அந்நாட்டின் அதிபர் தனி விமானத்தில் நாட்டடை விட்டுத் தப்பி ஓமன் நாட்டிற்கு சென்று விட்டார். நாடெங்கிலும் படு கொலைகள், பாலியல் வன்கொடுமை கள், சிறுவர்களைக் கடத்துதல் என அராஜகம் கொடிகட்டிப் பறக்கிறது. அமெரிக்கப் படையினர் உயிர் தப்பினால் போதும் என்று இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நாடு திரும்பி விட்டனர். இது எதைப் பற்றியும் அஞ்சிடாமல் காபூல் நகரில் உள்ள ரத்தன் நாத் கோயில் பூஜாரி பண்டிட் ராஜேஷ் குமார் அங்கேயே இருப்பேன் என்று கூறுகிறார். எங்களது முன்னோர்க ளால் தலைமுறை தலைமுறையாக பூஜை செய்து வந்த கோயில் இது. எனவே நான் இந்த நகரை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை. தாலிபான்கள் என்னைக் கொலை செய்தாலும் அதை நான் எனது இறைவனுக்கு செய்த பெரும் சேவையாகக் கருத்துவேன் என்று கூறுகிறார். இந்த உறுதி ஒவ்வொரு ஹிந்துவுக்கும் இருக்க வேண்டும். பண்டிட் ராஜேஷ் குமாரைக் காத்திட அவர் வழிபடும் தெய்வம் ரத்தன் நாத் அருள் புரிய வேண்டும்.