மாணவர் அமைப்பாக துவங்கிய தாலிபான் பின்னாட்களில் பிற்போக்கு கொள்கைகளின் அமைப்பாக மாறி ஆயுதங்களை கையில் எடுத்து சர்வதேச பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்து தற்போது ஆப்கானிஸ்தான் ஆட்சியை பயங்கரவாதத்தால் பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் உத்ராகண்ட் மாநிலத்தின் முக்கிய நகரான டேராடூன் பகுதியில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயின்ற ஓர் பெயர் வெளியிட விரும்பாத மூத்த ஆப்கன் ராணுவ அதிகாரி தாலிபான்களுக்கு அஞ்சி காபூல் நகரத்தில் பதுங்கி உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த தகவல் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் ராணுவ பலத்தைக் காட்டிலும், தாலிபான்கள் ஆயுத பலம் மிக்கவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார். பல ஆப்கன் ராணுவ வீரர்கள் போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். தங்கள் நாட்டு தலைவர்கள், தாலிபான்களிடம் விட்டுக்கொடுத்து சென்றதால் தங்களது தியாகம் வீணாகிவிட்டது என்றும், ஆப்கன் ராணுவ வீரர்கள் கோழை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.