ஏவுகணை தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் சாஃப் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜெட் விமானங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் எதிரியின் போர் விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், எதிரி நாடுகளின் ஏவுகணைகளை திசைதிருப்பும் திறன்கொண்ட ஜெட் விமானங்களை இந்திய விமானப் படைக்காக டிஆர்டிஓ நிறுவனம் தயாரித்திருக்கிறது. சாஃப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.