காங்கிரஸ் ஒரு உடைந்த ஊன்றுகோல். அதனை பயன்படுத்த இயலாது – பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலூனி.

0
493

பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். அதனை பற்றி கருது தெரிவித்த பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலூனி காங்கிரஸ் ஒரு உடைந்த ஊன்றுகோல். என தெரிவித்தார்.


பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். அதனை பற்றி பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலூனி கூறியதாவது; காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர். அதன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். காங்கிரசுக்கும் தன்மீது நம்பிக்கை இல்லாததால், கூட்டணி தேடுவதுதான் நல்லது.

காங்கிரஸ் கட்சி உடைந்த ஊன்றுகோல் போன்றது. அதைப் பயன்படுத்த இப்போது யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்தக் கட்சியினர் எவ்வளவு முயன்றாலும் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை; ஏற்படாது. காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here