மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வியால் பா.ஜ.,வினர் கோபமடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியன்று மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ‛சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?’ என்ற கேள்வியும், அதற்கான பதில்களாக ‛வி.டி.சாவர்க்கர், பி.ஜி.திலக், சுக்தேவ் தாப்பர் மற்றும் சந்திர சேகர் ஆசாத்’ ஆகிய நான்கு விருப்பங்களும் இடம் பெற்றிருந்தன.
அரசு தேர்வு ஒன்றில் இடம்பெற்ற இந்த சர்ச்சை கேள்வியால் பா.ஜ.,வினர் கொதித்து போயுள்ளனர். பா.ஜ., தரப்பு மேற்குவங்க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.