வேண்டுதல் நிறைவேற்றினார் தஹியா

0
387

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தஹியா, தனது பதக்கம் வெல்லும் கனவு நனவானதைத் தொடர்ந்து, தனது சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள கோயிலில் சிவலிங்கத்திற்கு ஜல அபிஷேகம் செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். அந்த படம் இணையத்தில் வெளியானது. இதைக்கண்ட சில இணையதளவாசிகள் அவரை ‘நிஜ வாழ்க்கை பாகுபலி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, தஹியாவின் குடும்பத்தினர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தஹியாவின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களது வீட்டில் சிவனுக்கு அகண்ட ஜோதியை ஏற்றி வைத்து வழிபட்டனர் என்பதும், கடந்த 2020ம் ஆண்டில், ரவி தஹியா, தீபக் பூனியா தனது நண்பர்களுடன் உலகின் உயரமான இட்த்தில் அமைந்துள்ள சிவன் கோவிலான உத்தரகாண்டின் துங்காநாத்திற்கு மலையேறி சென்று வழிபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here