மணல் கடத்தல் வழக்கு-பிஷப் மற்றும் பாதிரியாருக்கு ஜாமீன் மறுப்பு

0
196

திருநெல்வேலியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பாதிரியார் மற்றும் பிஷப்புக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது.அதில், 2019 நவ., முதல், கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ், எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார்.

எம் சாண்ட் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி, அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது.இது குறித்து ஐகோர்ட் உத்தரவின் படி, போலீசார், பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர. இந்நிலையில் பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ், 69, மற்றும் ஐந்து பாதிரியார்களை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர். இவர்களில் பிஷப் சாமுவேல் மார் இரோனஸ், பாதிரியார் ஜோஸ் ஜாம காலா 69, ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமின் கோரி திருநெல்வேலி 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தனர். இவர்களுக்கு மாஜிஸ்திரேட் கடற்கரையாண்டி ஜாமின் தர மறுத்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here