சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தவில்லை; நாம் அனைவரும் ஒன்று என்றுதான் கூறுகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

0
45

ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமி அனந்த மண்டபத்தில் நடைபெற்ற சங்கர விஜயம் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,

நமது ரிஷிகளும் சித்தர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக பாரதம் ஒரு தேசம் என்ற எண்ணத்தையும் அடையாளத்தையும் விடாமுயற்சியுடன் முழு உலகையும் ஒரு குடும்பமாகக் கருதும் வாழ்க்கை, படைப்பு பற்றிய ஒருங்கிணைந்த பார்வையுடன் வளர்த்து வருகின்றனர்.

இது சனாதன தர்மத்தின் அடிப்படை மற்றும் பாரதத்தின் மரபணு ஆகும். ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் அமைப்புசார்ந்த முறையில் நாட்டின் பல்வேறு மூலைகளிலும் நான்கு புனித பீடங்களை உருவாக்கினார். இந்த அமைப்புகள் கடினமான காலங்களில் நமது முக்கிய மதிப்புகள் மற்றும் நமது தேசத்தின் அடையாளத்தை மேலும் ஒருங்கிணைத்து நிலைநிறுத்தியுள்ளன.

ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட சிருங்கேரி பீடம் கடுமையான அந்நிய தாக்குதல்களை எதிர்கொண்டு நமது தேசிய மதிப்புகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியது. சுமார் 250 ஆண்டுகளாக கொடூரமான வெளித் தாக்குதல்களுக்கு எதிராக நமது தேசிய மதிப்புகளை வெற்றிகரமாகப் பாதுகாத்த விஜயநகரப் பேரரசை நிறுவியதில் மடத்தின் பங்களிப்பை மறக்க முடியாது. இன்று நம் நாடு விழித்தெழுந்து, சகாப்த மாற்றத்தின் வாசலில் நிற்கும் வேளையில், பாரதத்தை விஸ்வ குருவின் தெய்வீக இலக்குக்கு அழைத்துச் செல்வதில் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் போன்ற அமைப்புகளின் பொறுப்பு மகத்தானது” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here