திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கிய வங்கதேசத்தை சேர்ந்த, நான்கு இஸ்லாமியர்களை கைது செய்தது காவல்துறை.
திருப்பூர் பூம்புகார் நகர், செவந்தாம்பாளையம் பகுதியில் தங்கியுள்ள வடமாநிலத்தினருடன், வங்கதேசத்தை சேர்ந்த சிலர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்தபோது சம்பந்த பட்ட நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த மகபூல் சித்தர், 35, ஷோகில் அல்கர், 33, முகமது முன்னாகான், 32, அல் அமீன், 23 என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததும் தெரியவந்தது.நான்கு பேரையும் திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அவர்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் தொடர்பா என விசாரித்து வருகிறது.