நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும்,” என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன.பொருளாதார வளர்ச்சியை துாண்டுவதற்கு உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பொதுத் துறை – மற்றும் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பது அவசியம்.கொரோனா இரண்டாவது அலை மறுமலர்ச்சியை மெத்தனப்படுத்தினாலும், இந்திய பொருளாதாரம் மீண்டு வந்து, மீட்புப் பாதையில் உறுதியாக உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். அறிவியல், மனித வளமும் அதிகம் உள்ளது.ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் வாயிலாக, புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற, சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில், அதிககவனம் செலுத்த வேண்டும். இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும். என கேட்டுக்கொண்டார்.