குடிசை வாரிய வீடு தி.மு.க தகராறு

0
512

கோவை மாவட்டம் கிட்டசூராம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 35 கோடி ரூபாய் மதிப்பில் 512 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வீடுகளை ஒதுக்கித்தர கோரி தி.மு.க ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் மாணிக்கராஜ், தி.மு.க நகர தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் விவேக் ஆகியோர் விண்ணப்பங்களுடன் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றனர். யாருக்கு வீடுகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள், காவலர்கள் தலையிட்டு தி.மு.கவினரை சமாதானப்படுத்தினர். இந்த செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டல் விடுத்தனர்.

Source by; Vijayabharatham Weekly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here