பவுர்ணமி பூஜையோ இன்று(செப்.20) நடக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் செப்.21ல் தடை விதித்திருப்பதன் மூலம் ஹிந்து விழாக்கள் என்றாலே தடை விதிப்பதையே காட்டுவதாக இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பது: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதுசமுத்திர ஆரத்தி விழா பவுர்ணமி தினத்தில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படுகிறது. இதில் 15 முதல் 25 பேர் பங்கேற்பர். இந்த விழாவிற்கு தடை விதிக்கும் நோக்கில் பவுர்ணமி தினம் எப்போது வருகிறது என்று கூட பார்க்காமல் செப்.,21ல் பவுர்ணமி பூஜைக்கு தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது என்ன பூஜை, எப்போது நடைபெறுகிறது, எவ்வளவு பேர் பங்கேற்பார்கள்போன்ற அடிப்படை தகவல்களை கூட தெரிந்து கொள்ளாமல் ஹிந்து விழா என்றாலே அதனை தடை செய்ய வேண்டும், என தேதி கூட தெரியாமல் தடை விதித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.