கர்மயோகி ஶ்ரீ பையாஜி தாணி

0
441

கர்மயோகி பையாஜி தாணி பிறந்த தினம்: 1907 அக்டோபர் 9.

ஆர்.எஸ்.எஸ். ப்ரசாரக் என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமும் சங்கவேலை செய்து வருபவர் என்ற ஒரு வழக்கத்தை மாற்றி திருமணமாகிய க்ரஹஸ்தர்ரும் ப்ரசாரக்காகி சங்கப் பணியாற்றிடலாம் என்ற புதிய நடை முறையை உருவாக்கியவர் பிரபாகர் பல்வந்த் தாணி எனும் பையாஜி தாணி.

1907 அக்டோபர் 7 அன்று நாக்பூர் உம்ரேட் இல் பிறந்தவர். அக்காலத்திலேயே நாகபுரியில் பையாஜி தாணியின் பெயர் மிகவும் பிரபலமாகி இருந்தது.

இவருடைய தந்தை ஶ்ரீபாபுஜி லோக மான்ய திலகர் மீது பெருமதிப்பு கொண்டவர். அடிக்கடி பெரும் தேசியத் தலைவர்களை வீட்டிற்கு அழைத்து வருவார். அதன் காரணமாக டாக்டர் ஹெட்கேவாருடன் பையாஜி தாணிக்கும் தொடர்பு ஏற்பட் டது.

பையாஜி தாணி மெட்ரிக்வரை நாகபுரி யில் படித்தார். மேற்படிபிற்காக வாரணாசி சென்று படித்திடுமாறு டாக்டர்ஜி ஆலோசனை கூறினார். அதையேற்ற பையாஜி தாணி வாரணாசி சென்றார். அங்கு அவர் ஷாகா ஒன்றினையும் தொடங்கினார். நாகபுரிக்கு வெளியில் தொடங்கப்பட்ட முதல் ஷாகா அது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அந்த ஷாகாவிற்கு பனாரஸ் ஹிந்து பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த ப.பூ. குருஜி கோல் வல்கர் வரத் தொடங்கியதால் அவருக்கு சங்கத் தொடர்பு ஏற்பட்டது. டாக்டர்ஜியின் மறைவுக்குப் பிறகு சங்கத்தின் 2வது சர்சங்கசாலக் பொறுப்பினை ஏற்றவர் ஶ்ரீ குருஜி.

வாரணாசியில் இருந்து நாகபுரி திரும்பிய பையாஜி தாணி சட்டம் படித்துத் தேர்ச்சி பெற்றார். சங்க & வீட்டு வேலைகள் அதிகமாக இருந்ததால் வழக்கறிஞர் தொழிலை செய்யவில்லை.

திருமணம் ஆன பிறகும் கூட அதிக நேரம் சமுதாயப் பணியாற்றுவதிலேயே ஈடுபட்டு வந்தார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஹிந்து மஹாசபா மற்ற பிற கட்சித் தொண்டர்கள் பலருடன் அதிகத் தொடர்பு கொண்டிருந் தார்.

அம்மாதிரி வருபவர்களுடன் நன்கு நெருங்கிப் பழகி வந்தார். அவர்கள் ஏதாவது செய்து இடர்களில் மாட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உதவிட கை கொடுப்பார். ஆங்கிலேய அதிகாரி சாண்டர்ஸ் கொலையை அடுத்து அதில் ஈடுபட்ட ராஜ்குருவை தன்னுடைய பண்ணை வீட்டில் சில காலம் தங்க வைத்திருந்தார்.

1942 ஆம் ஆண்டு அதிகமான பேர் சங்க வளர்ச்சிக்காக ப்ரச்சாரக்காக முன்வர வேண்டும் என்று ப.பூ.குருஜி அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று சங்கப் ப்ரச்சாரக்காகிட கிரஹஸ்தரான பையாஜி முடிவு எடுத்தார். அதனடிபடையில் அவர் மத்தியபாரத் பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு மிகச் சிறப்பாக அவர் செயல் பட்டு சங்க வளர்ச்சிக்கு வித்திட்டார். அவரது செயல் திறனைக் கண்ட ஶ்ரீ குருஜியும் மற்றவர்களும் சேர்ந்து முடிவெடுத்து பையாஜி தாணியை சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) பொறுப்புக்கு தேர்ந்தெடுத்தனர்.

1945 முதல் 1956 வரை சர்கார்யவாஹ் பொறுப்பில் இருந்து நாடெங்கிலும் சங்க வளர்ச்சி யை விரிவாக்கம் செய்வதில் அதிக கவனம் செலுத்தினார்.

சங்க வரலாற்றிலும் நாட்டின் சரித்திரத்தி லும் மிக முக்கியமான காலக்கட்டம் அது.

தேசம் விடுதலை பெற்றது, பிரிவினை யால் விளைந்த துயரங்கள், காந்திஜியின் படு கொலை, அக்கொலைக்கு சங்கத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தடை விதிக்கப்பட்டது, நாட்டின் முதல் பொதுத் தேர்தல், அரசியல் துறையில் பணியாற்றிட தகுந்த கார்யகர்த்தர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது, சங்கத்தின் மீது போடப்பட்ட தடையை அகற்றிடக்கோரி நாடெங்கிலும் சத்தியாக்ரஹப் போராட்டம், அதனை ஒருங்கினைக்கும் வேலை, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என எண்ணற்ற முக்கியமான வேலைகள் இருந்த நேரமது. அனைத்தையும் மிக நேர்த்தியாகக் கையாண்டதில் பையா ஜி தாணியின் பங்கு பாராட்டத்தக்க தாக அமைந்திருந்தது.

காந்திஜி கொலையை அடுத்து உம்ரேட்டில் இருந்த பையாஜி தாணி வீடு காங்கிரஸ் கட்சி குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொள்ளை யடிக்கபட்டது. இவ்வளவு நடந்த போதும் பையாஜி தாணி ஒரு கர்மயோகியைப் போல் அமைதியாக காட்சியளித்தார்.

ஶ்ரீகுருஜியும் மற்றவர்களும் அவரது வீடு பற்றியும் வீட்டில் உள்ளவர்கள் பற்றியும் மிகுந்த கவலை கொண்ட னர்.

1956 இல் பையாஜி தாணியின் தந்தையின் மறைவையொட்டி வீட்டிற்கு அதிக நேரம் கொடுக்க வேண்டியதாகிற்று. அதன் காரண மாக ஶ்ரீ எகநாத் ரானடே சங்கத்தின் சார்கார்யவாஹ் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாகபுரியில் செயல்பட்டு வந்த நரகேசரி பதிப்பகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பையாஜி தாணி 1962 ஆம் வருடம் மீண்டும் சர்க்காரிய வாஹ் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரது உடல் நலம் பாதிக்கப் பட்டதால் 1965 இல் நடை பெற்ற அகில பாரத பிரதிநிதி சபையில் ஶ்ரீ பாளாசாஹேப் தேவரஸ் சர்க்காரிய வாஹ் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

அயராது சங்கப் பணியில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பையாஜி தாணி 1965 ஆம் வருடம் இந்தூரில் நடைபெற்ற சங்கசிக்ஷா வர்காவிற்கு சென்ற போது அங்கு அவரின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இறுதியில் 1965 மே 25 ஆம் தேதி தனது கர்மபூமியிலேயே (இந்தூர்) பாரத மாதாவின் மடியில் ஐக்கிய மானார்.

குடும்பஸ்தர் ஆக இருந்தபோதும் மிகச் சிறப்பாக ப்ரச்சாரக்காக வாழ்ந்து வழிகாட்டியுள்ள பையாஜி தாணியின் வாழ்க்கை நமக்கு ஒரு நந்தா விளக்காகும்.

பையாஜி தாணியின் வாழ்க்கை என்றென்றும் நந்தாவிளக்காக நின்று ஒளிவீசி ஹிந்து ஒற்றுமைப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழி காட்டட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here