ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

0
104

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், தேவையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான மூன்று தேதிகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தேர்ந்தெடுத்து காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து அவற்றில் ஒரு தேதியை தேர்ந்தெடுத்து அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறை முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினர். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் முழக்கமிடாமல் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here