ஆடை மாற்றத்திற்கு காரணமான மதுரை எனது தாய் நிலம் – காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி

0
1158

காந்தியின் ஆடை மாற்றத்துக்குக் காரணமான மதுரை, எனது தாய் நிலம் போன்றது என்று காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி தெரிவித்தார்.


சுதந்திரப் போராட்டத்தின் போது மதுரையில் 1921 செப்.22-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்துக்கு வந்த மகாத்மா காந்தி இங்குள்ள மக்களின் நிலையைக் கண்டு தனது உடையை களைந்து அரையாடைக்கு மாறினார்.

இந்நிலையில் காந்தி அரையாடைக்கு மாறியதன் நினைவாக நூற்றாண்டு விழா நடத்த மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சார்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி செவ்வாய்க்கிழமை மதுரைக்கு வருகை தந்தார். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்குச் சென்ற அவா் அங்குள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னா் மதுரை எனது தாய் நிலம். மதுரைக்கு வந்ததில் ஆசீா்வதிக்கப்பட்டதாக உணா்கிறேன். என் குடும்பத்துடன் இருப்பது போல உணா்வு ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தியை மாற்றிய மகத்தான நிலத்துக்கு எனது மரியாதையை காணிக்கையாகச் செலுத்துகிறேன். இந்திய ஏழை மக்களின் முகமாக வாழ்ந்த மகாத்மா காந்தி அரையாடைக்கு மாறிய நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. மதுரையில் இருந்த விவசாயிகளின் தோற்றமே காந்தியின் ஆடை மாற்றத்துக்கு முக்கியக் காரணமானது. காந்தி ஆடையை மாற்றிக்கொண்டு இமயமலைக்கு சந்நியாசம் செல்லவில்லை. அவா் இங்கேயே ஏழை மக்களுடன் வாழ்ந்து, அவா்களுக்காக தன் வாழ்க்கையை அா்ப்பணித்தவா். எளிமையின் உதாரணமாக வாழ்ந்தவா் காந்தி. அவா் ஆன்மீகத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவரது வாழ்க்கையே ஆன்மீக நெறியைக் கொண்டிருந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here