சேவாபாரதி தென் தமிழ்நாடின் மாநில செயற்குழு கூட்டம் 23/09/2021 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுரை அமிர்தனந்தமயி மடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை திரு அரங்க ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இச்செயற்குழு கூட்டத்தை பூஜ்ய ஸ்வாமி ஸ்வரூபானந்த, சிவானந்த ஸத்சங்கபவன், மதுரை திரு S.நடனகோபால் செயலர் மதுரை கல்லூரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். மேலும் மாநில நிர்வாகிகளாக புரவலராக வெள்ளிமலை பூஜ்ய ஸ்வாமி சைதன்யானந்த மகராஜ், அவர்களும் திரு அரங்க ராமநாதன் அவர்கள் கௌரவ தலைவராகவும் மாநிலத்தின் புதிய தலைவராக மதுரை ராஜாஜி மருத்துவமணை முன்னாள் HODயும் பல்வேறு விதமான சேவை பணிகளை ஆற்றிவருபவருமான திரு டாக்டர் S வடிவேல்முருகன் அவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.