உத்தராகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி அணைக் கட்டுமானத்தின்போது அங்கு பணிபுரியும் முஸ்லிம்களுக்காக கான்ட்-காலா கோடி காலனியில், அரசு நிலத்தில் தற்காலிகமாக கடந்த 2000ஆவது ஆண்டில் ஒரு தற்காலிக மசூதி கட்டப்பட்டது. திட்டத்தை முடித்து அனைவரும் சென்ற பிறகும் அந்த தற்காலிக மசூதி அகற்றப்படவில்லை. உள்ளூர் முஸ்லிம்கள் அதனை அகற்றவிடவில்லை. அதனை பயன்படுத்திய அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களால் அப்பகுதியில் உள்ள பெண்களை சீண்டுவது போன்ற பல்வேறு அத்துமீறல்களும் நடைபெற்றன. இதனால் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளூர் மக்கள், ஹிந்து அமைப்பினர் தொடர்ந்து போராடினர். சமீபத்தில் இதுகுறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. #RemoveTehriMosque என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனையடுத்து, உள்ளூர் முஸ்லிம்களிடம் பேசி சுமூக தீர்வை எடுத்த அம்மாவட்ட நிர்வாகம் அந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றினர்.