மத்திய நிதி அமைச்சகம், பன்னிரெண்டு பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் தேர்வுகளை ஆங்கிலம், ஹிந்தி மட்டுமில்லாமல் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் சம உரிமை, பிராந்திய மொழிகள் மூலம் வாடிக்கையாளர்கள் உடனான வங்கியின் உறவு, எளிதான செயல்பாடுகள் அடிப்படையில் பரிந்துரைத்த இந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, இக்குழு அமைக்கப்பட்டதை அடுத்து, அதன் பரிந்துரைக்காக நட்த்தப்படவிருந்த வங்கித் தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இனி அவை புதிய உத்தரவின் அடிப்படையில் நடக்கும் என தெரிகிறது.