ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி பேசிய பிரதமர் மோடி, ‘மருத்துவ கல்வி, சுகாதார சேவை கிடைப்பதில் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக புதிய தேசிய சுகாதார கொள்கையை வகுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா போன்றவற்றை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 170க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக 100 மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி அல்லது முதுகலை மருத்துவ கல்லூரி அமைக்கப்பட உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வரும் முன்பாக, 2014ல் நாட்டில் இருந்த மருத்துவ இளங்கலை, முதுகலை படிப்புக்களுக்கான இடங்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரம். தற்போது, இது 1.40 லட்சமாக அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.