கொரோனா தொற்றில் இருந்து பாரதம் வேகமாக மீண்டு வரும் நிலையில் பாரதத்தின் வேலைவாய்ப்பு சந்தை அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால் அனைத்து துறையிலும் அதிகளவிலான வர்த்தகம் உருவாக வாய்ப்புள்ளது. பாரதத்தின் முன்னணி வேலைவாய்ப்பு சேவை நிறுவனமான டீம்லீஸ் செய்த ஆய்வில், நமது பாரத வேலைவாய்ப்புச் சந்தை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 18 மாத உயர்வை அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. 21 வர்த்தகத் துறையைச் சேர்ந்த சுமார் 650 சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக ஐ.டி, எ.ப்எம்.சி.ஜி, கல்வி, ஈ காமர்ஸ், டெக் ஸ்டாடர்ட் அப், டெலிகாம், உற்பத்தி, இன்பரா, கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் அடுத்த 3 மாதத்தில் உருவாகும். நடுத்தர, உயர் பதவியில் வேலைவாய்ப்புகளைவிட புதியவர்களுக்கும், ஜூனியர் பிரிவினருக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டு உள்ளது.