தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் சிப்காட் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அப்போது, தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏ.குமரெட்டியாபுரம், மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சந்தித்து, ‘தங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வந்த டொ்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடலால் பாதிக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மட்டுமல்ல, தி.மு.கவினர் பலரும் அதில் ஒப்பந்தப்பணி எடுத்து நடத்தி வந்தவர்கள்தான் என்பதால் அவர்களும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, கனிமொழி இதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக ஒரு கிராமவாசி தெரிவித்தார்.