டெல்லியில் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் சார்பில், ‘மாற்று எரிபொருள்- சாலை முன்னேற்றம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, பயோ எத்தனால் மாற்று எரிபொருள் மிக பெரிய நன்மையை விளைவிக்கும் சுத்தமான எரி பொருள். மிகவும் குறைந்த வாயு வெளியேற்றத்துடன் கூடியது. இதை ஊக்குவிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதற்காக மத்திய அரசு இ 20 என்ற எரிபொருள் திட்டத்தை மறு வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவிகித பயோ எத்தனால் பயன்பாடு உறுதி செய்யப்படும். இதற்கு 10 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படலாம். தற்போது சர்க்கரை ஆலைகள் 90 சதவிகித தேவையை பூர்த்தி செய்கின்றன. விமான எரி பொருளுடன் 50 சதவீதம்வரை பயோ எத்தனாலை கலக்க முடியும் இதனை இந்திய விமான படை பரிசோதித்து ஒப்புதல் அளித்துள்ளது. 100 சதவீதம் பயோ எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் பிளக்ஸ் எரிபொருள் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் அதன் தேவை 5 மடங்கு அதிகரிக்கும்’ என்று கூறினார்.