நவராத்திரி நேரத்தில் கன்யா பூஜை செய்வது வட பாரதத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. கோரக்பூர் கோரக்நாத் மடத்தின் பீடாதிபதியாக இருந்து வரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் மடத்தின் பாரம்பரிய வழியில் இன்று கன்யா பூஜை செய்து வழிபாடு செய்தார். இளம் சிறுமிகளுக்கு பாத பூஜை செய்து, புத்தாடைகள் வழங்கி, பிரசாதம் (உணவு) கொடுத்து பின்னர் தக்ஷிணை (சிறு தொகையை) கொடுத்து அனுப்பிவைப்பது வழக்கத்தில் உள்ளது. இவரைப் போன்றே மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அவர்களும் தனது மனைவியுடன் சேர்ந்து கன்யா பூஜை செய்தார்.
தகவல்; ஸ்ரீ சடகோபன் ஜி