பயங்கரவாத செயலில் ஈடுபட ஹவாலா பரிவர்த்தனை செய்த வழக்கு 2017 இல் என்.ஐ.ஏ. பதிவு ; குற்றத்தை ஒத்துக்கொண்ட யாசின்மாலிக்

0
153

மே 19 தண்டனை பற்றி நீதிமன்றம் அறிவிக்கும்.
காஷ்மீரில் ஹிந்துக்களை கொன்று குவித்தவன், பேருந்து நிலையத்தில் ராணுவ வாகனத் தை எதிர்பார்த்து நின்று கொண்டி ருந்த பாரத விமானப் படை வீரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி யாசின்மாலிக். 30 வருடங்களுக்கும் மேலாக அரசியல் வாதிகள் சிலரின் ஆதரவுடன் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவன். கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக் நீதி மன்றத்தில் தான் செய்த குற்றங்களை ஒத்துக் கொண்டுள்ளான். செய்த குற்றத்திற்கு தண்டனை என்ன? எவ்வளவு வருடம் என்பதை மே 19 அன்று அறிவிக்கப்படும்.யாசின்மாலிக் தவிர ஹபிஸ் சயீது, ஷப்பிர் ஷா, மஸ்ரத் ஆலம், ரஷீத் இன்ஜினீயர், சஹூர் அஹமத் ஷா வாட்டலி, பிட்டா காராத்தே, அப்தாப் அஹ்மத் ஷா, நயீம் கான், பஷீர் அஹ்மத் பட், மற்றும் அலியாஸ் பீர் சைபியுல்லா ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here