சமூக விரோத கூடாரம்

0
804

டெல்லி அருகே சிங்கு குண்டிலி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டக் களத்தில் இரு தினங்களுக்கு முன் ஒரு நபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது குறித்த செய்திகள் வெளியான நிலையில், டைனிக் ஜாக்ரன் பத்திரிகை வெளியிட்டு உள்ள ஒரு செய்தியில், போராட்டக் களத்தின் அருகில் இருக்கும் காலணிப் பகுதிகளில் இருந்து இதுவரை 18க்கும் மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த நவம்பரில் இருந்து விவசாயிகள் என கூறிக்கொண்டு முகாமிட்டுள்ள அவர்களின் போராட்டத் தளம் படிப்படியாக ஒரு குற்ற மையமாக மாறிவிட்டது. அங்கு போராட்டங்கள் என்ற பெயரில் அனைத்து வகையான சட்டவிரோத நடவடிக்கைகளும் செழித்து வளர்கின்றன. இதனால் பெண்கள் அந்த பகுதிகளில் பாதுகாப்பாக செல்வது சிரமமாகிவிட்டது. உள்ளூர் கடைக்காரர்களும் இவர்களால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப் படுகின்றனர். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல்கள் தந்தாலும் இதில் நடவடிக்கை எடுக்க அவர்கள் தயங்குகின்றனர். சட்ட அமலாக்க அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை’ என கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here