புறம்தள்ளுவோம் பொய்யர்களை

0
538

நடிகர் சூர்யா தற்போது நடித்து வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால், அதில் அவர் உண்மை நிகழ்வுகளை வெளியிடாமல் திட்டமிட்டே பல திரிபுகளை உட்புகுத்தி மக்களை திசைதிருப்பியுள்ளார்.

பல மொழிகளில் அவர் மட்டும் படம் வெளியிட்டு சம்பாதிக்கலாம் ஆனால் தமிழர்கள் மூன்று மொழிகள் படிக்க எதிர்ப்பு தெரிவிப்பார், அந்த கதை நிகழ்வையும் தமிழில் ஒன்றாக, ஹிந்தியில் வேறொன்றாக வெளியிடுவார், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக பேசும் அவர் அமேசான் என்ற கார்ப்பரேட்டிடம் தன் படத்தை வெளியிட்டு காசு பார்ப்பார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ராசாக்கண்ணு என்ற பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை அடித்து கொன்ற வழக்கில் தமிழக காவல்துறை அதிகாரி உண்மையில் அந்தோணிசாமி என்ற கிறிஸ்தவர், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. ஆனால், அந்த உண்மையை திரித்து படத்தில் கொலை செய்யும் அதிகாரி ஒரு வன்னியராக சித்தரிக்கப்பட்டு உள்ளர். இந்த வரலாற்று திரிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த வன்னியர்கள் சிலர், தங்களின் பகுதிகளில் இருந்த சூர்யா ரசிகர் மன்ற போர்டுகள் தகர்த்தெறிந்துள்ளனர்.

இதை அறிந்து பதறிப்போன சூர்யாவும் ஜெய் பீம் திரைப்படக்குழுவினரும் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்குவதாக உத்திரவாதம் கொடுத்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இது ஒன்றும் சூர்யாவுக்கு புதியது அல்ல, ஏற்கனவே, இதேபோல, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் கதையை சூரரை போற்று என படமெடுத்த சூர்யா, கோபிநாத் கதாபாத்திரத்தை பொய்யாக ஒரு பெரியாரிஸ்ட்டாக காண்பித்து மக்களை திசை திருப்பியுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. இவர் மட்டுமல்ல, இதுபோல தமிழ் திரைப்படத்துறையில் இப்படி பலர் உள்ளனர். அவர்களை மக்கள் சரியாக அடையாளம் கண்டுகொண்டு புறம் தள்ளுவது சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் வருங்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கும்.

மதிமுகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here