ஹிந்துக்களின் புனித ஸ்தலமான வாரணாசின் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள அன்னபூரணி தேவியின் விக்ரஹம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப்பின் நம்முடைய பாரத நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆங்கிலேய கிருத்துவ ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பல தெய்வ விக்கிரகங்களில் ஒன்று வாரணாசி அன்னபூரணி தேவியின் விக்ரகம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயே கிருத்துவ அரசினால் கொள்ளையடிக்கப்பட்ட இந்த விக்ரஹம் மீண்டும் கனடா நாட்டிலிருந்து நம் பாரத நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கடந்தமாதம் உத்தரப்பிரதேச மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஹிந்துக்களின் புனித விக்ரஹங்கள் காக்கப்பட்டு வருவதற்கு இந்தியப் பேரரசை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வருகின்ற நவம்பர் 15பின் அன்னபூரணி விக்கிரகம் காசியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்படும்.
மீண்டும் அன்னபூரணி தேவி இந்தியாவில் பிரதிஷ்டை செய்யப்படுவதால் அனைத்து மக்களின் கஷ்டங்கள் தீர்க்கப்படும் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.