விழுப்புரத்தில் ஆஞ்சநேயசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில், டாக்டர் தியாகராஜன் என்பவர் கிளினிக் நடத்துகிறார். 2014 முதல் அவர் ஒரு ரூபாய்கூட வாடகை செலுத்தவில்லை. இதனால், குத்தகையை ரத்து செய்து வெளியேற்ற நிர்வாக அதிகாரி, 2013ல் உத்தரவு பிறப்பித்தாலும், அதை அமல்படுத்தவில்லை. 2021 செப்டம்பரில் அவரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கோயில் நிர்வாகம் எடுத்தது. உடனே வாடகை பாக்கி, உயர்த்தப்பட்ட வாடகை என 3.56 லட்சம் ரூபாயை, கோயில் நிர்வாகத்திடம் தியாகராஜன் செலுத்தினார். வெளியேற்றப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த, நீதிபதி, ஒரு மாதம் வாடகை பாக்கி என்றாலும், சொத்தின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததால் அவரை ஆக்கிரமிப்பாளராகக் கருதி குத்தகையை ரத்து செய்ய கோயில் நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. ஆக்கிரமிப்பாளரை சட்டப்படி அகற்றிக் கொள்ளலாம். வாடகை பாக்கியையும் சட்டப்படி வசூலித்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.