சேவையே வேள்வி

0
901
  1. மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான சக்ஷம் ரோட்டரி கிளப் ஆப் சென்னை போர்ட் சிட்டி இணைந்து மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட் பிஸ்கட் வழங்கியது.
  2. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் திருத்தணி பகுதி மக்களுக்கு இந்து முன்னணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.
  3. தேசத்தின் எல்லைப்புறங்களில் வாழும் மக்களின் நலம் நாடும் அமைப்பான சீமா ஜாக்ரன் சார்பில் பழவேற்காடு பகுதியில் மழை வெள்ளத்தை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டடு.
  4. இடுப்பளவு மழை நீரில், இருள், பள்ளம் மேடு போன்ற ஆபத்துகள் இருந்தபோதிலும், இது தனது சக்திக்கு மீறிய செயல் என தெரிந்திருந்தும் இரண்டு கைகளிலும் பெரிய பாத்திரங்களில் மக்களுக்கு உணவு கொண்டு சென்று அளித்துவிட்டுத் திரும்பும் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்.
  5. இடுப்பளவு தண்ணீர், அதில் மிதக்கும் குப்பைகள் என அனைத்தையும் தாண்டி பயணித்து வீடு வீடாக மக்களை நேரில் தேடிச்சென்று உணவு அளிக்கும் பாரதி சேவா சங்கத்தின் தன்னார்வலர்கள்.
  6. ஆர்.எஸ்.எஸ் மூலம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற உணவு தயாரிக்கும் பணியில் கலந்துக் கொண்ட ஒரு ஸ்வயம்சேவகனுக்கு பிறந்தநாள். தன் பிறந்த நாள் அன்று அதனை வீட்டில் சந்தோஷமாக கொண்டாடுவதை விடுத்து மக்கள் பணிக்காக வந்த அவனை சந்தோஷப்படுத்த, கூட இருந்த சக ஸ்வயம்சேவகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். வாழிய பல்லாண்டு பாட்டும் ராம நாமமும் பாடி வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here