ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது தாக்குதல்

0
404

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பை சேர்ந்த மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை தோறும் அந்த பல்கலைகழக வளாக அறையில் வாராந்திர கூட்டம் நடத்துவது வழக்கம். அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் கூட்டம் நடத்தினர். அப்போது அங்கே வந்த இடதுசாரி கட்சிகளின் ஏ.ஐ.எஸ்.ஏ மற்றும் எஸ்.எப்.ஐ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த அறையில் வந்து இடையூறு செய்ததுடன் மூர்கமாகவும் தாக்கினர். இதில் அங்கிருந்த மாணவர்கள், மாணவிகள், உடல் ஊனமுற்ற மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஒரு மாணவனின் விரல் உடைந்துபோனது. படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here