ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவக் ஏ. சஞ்சித் சமீபத்தில் இலக்கு வைத்து கொல்லப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. இந்த கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இறந்தவரின் குடும்பத்துக்குத் துணை நிற்கிறோம். குறி வைத்து நடத்தப்படும் இது போன்ற கொலைகளை தடுக்க ஜனநாயக ரதீயில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசு தவறியது மிகவும் பரிதாபத்திற்குரியது. ஸ்வயம்சேவகர்களை குறிவைத்து கொலை செய்ததில் ஆளும் சிபிஎம் மற்றும் இஸ்லாமிய சக்திகளுக்கு இடையே ரகசிய புரிதல் உள்ளது என்பது முந்தைய அனுபவங்களில் இருந்து தெளிவாகிறது என்பதால், இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை செய்யப்படவேண்டும்,மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறோம். சிபிஎம் ஆட்சியில் நீதி வழங்கப்படாவிட்டால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். சஞ்சித் கொலையில் தொ டர்புடைய குற்றவாளிகளுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருப்பதால், அது குறித்து விரிவான என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோருகிறோம். PFI இன் பயங்கரவாதத் தொடர்புகள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் குறித்து மேலும் விசாரணை செய்து, சமூகத்தில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் ஒரே குறிக்கோளுடன் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்பை தடை செய்யுமாறு மாநில மற்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
-ஆர்எஸ்எஸ் சா சர்கார்யவா, டாக்டர் மன்மோகன் வைத்யா ஜி கேரளாவின் பாலக்காட்டில் உள்ள சஞ்சித்தின் வீட்டிற்குச் சென்றபின் அளித்த பேட்டி
-சஞ்சாரி