அந்த ஒரு நிமிடம்

0
494
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் சில பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்த வழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகமாக அவனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டிக்குத் திரும்பினார்.
 
சில வருடங்களுக்குப் பிறகு, அவர் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த அவனும் அமர்க்களமான கோட், டை சகிதமான உடையில் விருந்தில் பங்கேர்றான். அவன் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் பேசினான். “நீங்கள் என்னை மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இந்த நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். இவை அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம்” எனகூறி, அவரிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.
 
இவரும், “ஆம், எனக்கு நினைவு வந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய், உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா?” என்று கேட்டார்.
 
என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது தட்டில் இட்டபின் மீண்டும் வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்.
 
“அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர் வரையில் சோம்பேறியாக, அழுக்காக, புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக, யாராலும் மதிக்கப்படாதவனாக இருந்த நான், உங்களால் திருந்தினேன். நான் யார், எதற்காகவோ பிறந்தேன், எனது கொள்கை என்ன, ஏன் இப்படி ஆனேன்? சாகும் போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சை எடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி ஐயா”, என்றான்.
 
அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன்பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here